தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ஜெயலலிதா துணிச்சல்காரர்’ - ஆ.ராசா புகழாரம்! - ஈரோடு அண்மைச் செய்திகள்

ஈரோடு: புன்செய் புளியம்பட்டியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ’ஜெயலலிதா துணிச்சல்காரர்’ எனப் புகழாரம் சூட்டினார்.

ஈரோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா
ஈரோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா

By

Published : Mar 22, 2021, 8:01 AM IST

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் திமுக வேட்பாளர் பி.எல்.சுந்தரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையில் ஆ.ராசா பேசுகையில், “ஜெயலலிதா குற்றவாளியென அறிவிக்கப்பட்டபிறகும் மத்திய சட்ட அமைச்சர், பாஜகவினர் அவரை சந்தித்ததன் காரணம் அவர் வலுவானவர்.

’ஜெயலலிதா துணிச்சல்காரர்’ - ஆ.ராசா புகழாரம்

1998ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்த பின்னர், ”நான் தவறிழைத்து விட்டேன். இனிமேல் அந்தத் தவறை செய்ய மாட்டேன்” என ஜெயலலிதா கூறினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி ’அம்மா ஆட்சி’ என கூறிக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். ஜெயலலிதா அசாதாரண துணிச்சல்காரர், மாநில அரசி்ன் சுயாட்சியை மத்திய அரசிடம் அடகு வைக்கவில்லை.

ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வு வரவில்லை, அதனை எதித்தாா். கலைஞரிடம் ஜெயலலிதாவைப் பற்றி கேட்டபோது ”ஜெயலலிதா துணிவு படைத்தவர்” என்றார். ஆனால், எடப்பாடிக்கு துணிச்சல் இல்லை. மத்திய அரசிடம் தமிழ்நாட்டை அடகு வைத்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலின்போது நடைபெற்ற பரப்புரையில் இந்தத் தேர்தல் மோடிக்கும், லேடிக்குமான தேர்தல் எனக் கூறியவர் ஜெயலலிதா” என்றார்

இதையும் படிங்க:ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு அமல்!

ABOUT THE AUTHOR

...view details