ஈரோடு:திருப்பூர் பட்டாம்பூச்சி தொண்டு நிறுவனம் - பாண்டியன் நகர் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் கார்த்திகேயன், ராஜுகிருஷ்ணன், ரவிச்சந்திரன், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து மலை கிராமப் பள்ளிகளை வண்ணமயமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சுமார் 50 பள்ளிகளை வண்ணம் தீட்டி அழகுப்படுத்தியுள்ளனர். இதற்காக ஆசிரியர்கள் எந்தக் கட்டணமும் பெறுவது இல்லை.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள தெங்குமரஹாடா ஆரம்ப பள்ளியில் நாட்டின் தலைவர்களின் ஓவியங்கள், இயற்கை காட்சிகள் எனப் பல்வேறு விதமான ஓவியங்களை மாணவர்களின் கவனத்தை ஈர்க்க புனைந்துள்ளனர். இதற்காக 30 கிமீ தூரம் அடர்ந்த காட்டுப்பகுதியில் பயணித்தனர்.
வண்ணமயமான ஓவியங்கள்
பள்ளி வகுப்பறையில் இயற்கை காட்சிகளுடன் அமைந்த அருவி, விலங்குகளைப் புனைந்துள்ளனர். மாணவர்கள் எளிதில் கற்கும்விதமாக பாடம் சார்ந்த ஓவியங்கள் மனித உறுப்புகள், இந்தியா, தமிழ்நாடு வரைபடங்கள் வரையப்பட்டுள்ளன.