ஈரோடு மாவட்டம், சென்னிமலை அடுத்த மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் . பழவியாபாரியான இவர் மாணிக்கம் பாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்ற போது தகராறு ஏற்பட்டுள்ளது.
செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வியாபாரி - செல்போன் டவர்
ஈரோடு: குடும்பத்தகராறு காரணமாக செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி கீழே இறக்கினர்.
இதில் விரக்தியடைந்த செல்வராஜ் மது அருந்திவிட்டு அதே பகுதியில் இருந்த 250 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகள் மற்றும் உறவினர்கள் செல்வராஜை கீழே இறங்கி வரும்படி அறிவுறுத்தினர். ஆனாலும் அவர் கீழே இறங்கவில்லை. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் செல்போன் கோபுரத்தில் இருந்த செல்வராஜூவிடம் சமாதானம் பேசி சாதுரியமாக கீழே இறக்கினர். பழவியாபாரி செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.