ஈரோடு மாவட்டம், நாடார் மேடு பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன் (24). பெயிண்ட்டரான இவர், நேற்று தனது பணியை முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள மதுக்கடையில் தனது நண்பன் செந்தில் (27) உட்பட நான்கு பேருடன் மது அருந்தியுள்ளார்.
அப்போது, போதையில் இருந்த மஞ்சுநாதனுக்கு செந்திலுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, பின்னர் சண்டையாக மாறி உள்ளது. சண்டை உச்சகட்டத்தை அடைந்தவுடன் ஆத்திரமடைந்த செந்தில் தன்னிடம் இருந்த கத்தியால்மஞ்சுநாதனை சரமாரியாக குத்தியுள்ளார்.