ஈரோடு: தமிழக மது விலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி வகித்து வந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராக உள்ள சு.முத்துசாமியிடம் வழங்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்குப் பின்பு தமிழக அரசு, தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட மதுபான கடை மற்றும் பார்களை ரத்து செய்தது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத மற்றும் உரிய அனுமதி பெறாமல் மதுபானங்கள் விற்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தன.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் மொத்தமாக 250 அரசு மதுபான கடை மற்றும் பார் வசதியுடன் கூடிய கடைகள் செயல்பட்டு வந்தன. தொடர்ந்து கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு 207 அரசு மதுபான கடைகள் பார் வசதியுடன் செயல்பட்டு வந்தன. தற்போது அது மேலும் குறைக்கப்பட்டு பார் வசதியுடன் 183 அரசு மதுபான கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க:தமிழகத்தில் 70 லட்சம் பேருக்கே உரிமைத்தொகை வழங்கவுள்ளது கண்டனத்திற்குரியது - பாஜ பிரமுகர் கண்டனம்