தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்தியமங்கலம் அருகே போலி மதுபானங்கள் விற்பதாக புகார்! - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தொட்டம்பாளையம் அரசு மதுபான கடையில் போலி மற்றும் காலாவதி ஆன மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

போலி மதுபானங்கள்
போலி மதுபானங்கள்

By

Published : Nov 22, 2020, 8:03 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலாவதியான மதுபானங்கள் விற்கப்படுவதாகவும், அங்கு அனுமதி இல்லாத பார்களில் போலி மதுபானம் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதற்கிடையில் தொட்டம் பாளையத்தை சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவர் தொட்டம்பாளையம் டாஸ்மார்க் கடையில் குவாட்டர் வாங்கி உள்ளார். அதில் காலாவதியான பின்பு அதிக விலைக்கு வைக்கப்பட்டது, காலை நேரங்களில் அனுமதி இல்லாத நிலையில் அதிக விலைக்கு மதுபானத்தை விற்றதை சண்முக சுந்தரம் உணர்ந்துள்ளார்.

போலி மதுபானங்கள்

இதனையடுத்து அரசு மதுபானக் கடையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட விலை அதிகமாக மது, விற்கப்படுவதாகவும், 24 மணி நேரம் மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் மதுவிலக்கு காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details