ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான சாய தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றும் சாயக்கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சில தொழிற்சாலைகளில் சாய கழிவுநீரை சுத்திகரிக்கப்படாமல் நீர்நிலைகளில் நேரடியாக கலந்துவிடப்படுகிறது.
கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சாய துணிகளை கொண்டு வந்து அலசி செல்கின்றனர். இது வாடிக்கையாக அங்கு நடந்து வருகிறது. ஆற்றில் கலக்கும் சாய கழிவுநீர் நேரடியாக வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், குழந்தைகளுக்கு நோய் பாதிக்கும் அபாயம் உள்ளன என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அலுவலர்களை பார்த்ததும் தப்பி ஓட்டம்
இந்நிலையில் நேற்று (செப்.25) இரவு 10 மணி அளவில் காவிரி கரையில் சிலர் சாய துணிகளை அலசுவதை பொதுமக்கள் பார்த்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்துள்ளனர். அலுவலர்கள் வருவதை பார்த்ததும் சாய துணிகளை அலசிக்கொண்டு இருந்தவர்கள் துணிகளை அங்கேயே விட்டுசென்று தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
பொதுமக்களுக்கு பாதிப்பு