ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் செங்குந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சஜீவன் (வயது 41). சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் இவரது வீட்டில், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் புகுந்து, சஜீவன், அவரது குடும்பத்தார் ஆகியோரைத் தாக்கி வீட்டிலிருந்த 13 பவுன் தங்க நகைகள், 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
சத்தியமங்கலத்தில் கொள்ளை நடந்த வீட்டில் ஐஜி ஆய்வு! - முகமூடி அணிந்து கொள்ளை
ஈரோடு: சத்தியமங்கலத்தில் கொள்ளை நடந்த வீட்டில் மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா ஆய்வு மேற்கொண்டார்.
IG inspects the house where the robbery took place in erode
இது குறித்து நான்கு மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (செப்.10) கோவை மேற்கு மண்டலக் காவல்துறை இயக்குநர் (ஐஜி) பெரியய்யா, கொள்ளை நடந்த வீட்டிற்குச் சென்று ஆய்வு நடத்தி, தனிப்படையினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.