ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் மலைப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் ஆசனூர், திம்பம், கேர்மாளம், கடம்பூர் சுற்றுவட்டார வனப்பகுதியில் ஒரு மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது.
சத்தி மலைப்பகுதியில் ஆலங்கட்டி மழை! - மைசூர்
ஈரோடு: சத்தியமங்கலம் மலைப்பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்வதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாய் செல்லுமாறு வனத்துறை அறிவித்துள்ளது.
வெப்பம் காரணமாக வாட்டி வதைத்த மலைப்பகுதியில் திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. வனப்பகுதியில் காய்ந்துபோன நிலங்களில் ஈரப்பதம் பிடித்துள்ளதால் செடி, கொடிகள் துளிர்விடும் என வனத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆலங்கட்டி மழை காரணமாக சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்கள் தொடர்ந்து இயக்க முடியாமல் ஆசனூரில் நிறுத்தப்பட்டன. சூறைக்காற்றுடன் மழை பெய்வதால் வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கையாய் செல்லுமாறு வனத்துறை அறிவித்துள்ளது.