ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் 82 மையங்களில் 14 ஆயிரத்து 217 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதில் வட்டார மருத்துவர்கள், சுகாதார மருத்துவர்கள், செலிவியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என 348 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இம்முகாமைத் தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ' அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழ்நாட்டில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையத்தில் 52 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் 25 ஆண்டுகளுக்கு குடிநீர் பற்றாக்குறை இல்லாத நகராட்சியாக உருவாகும். கோபிசெட்டிபாளையம் நகர்பகுதியில் பத்து பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' எனத் தெரிவித்துள்ளார்.