தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே துப்பட்டாவில் கணவன் மனைவி தற்கொலை - ஈரோட்டில் பரபரப்பு! - காவல்துறையினர் விசாரணை

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே அரசு போக்குவரத்துக்கழக ஓட்டநர் கார்த்திகேயன் அங்கன்வாடி பணியாளரான அவரது மனைவி மகேஷ்வரி ஆகிய இருவரும் ஒரே துப்பட்டாவில் வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

suside
suside

By

Published : Jan 4, 2020, 11:52 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோபிசெட்டிபாளையம் அருகே கூகலூர் வெற்றி நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (38). இவர் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரும் அதே ஊரில் அரசு பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணிபுரியும் மகேஸ்வரி என்பவரும் காதலித்து கடந்த 15 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

குழந்தைகள் எதுவும் இல்லாத நிலையில் அதே ஊரில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை கார்த்திகேயன் வீடு உள்பக்கமாக தாளிட்டபடியும், வெகு நேரமாகத் திறக்காமலும் இருந்த காரணத்தினால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் கதவைத் தட்டி கூப்பிட்டபோது உள்ளே எந்த சத்தமும் வராததால் சந்தேகமடைந்து கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஒரே துப்பட்டாவில் கணவன் மனைவி தற்கொலை

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கதவை உடைத்து பார்க்கையில் கார்த்திகேயன் தூக்கில் தொங்கியபடியும் அவரது மனைவி மகேஸ்வரி இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். இருவரின் உடலையும் கைப்பற்றிய காவல் துறையினர் கோபி அரசு மருத்துவமணைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இருவரின் உறவினர்களிடத்திலும் விசாரணை செய்து வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:காட்டுயானை தாக்கி உயிரிழந்த மூதாட்டி - தமிழ்நாடு அரசு உதவி

ABOUT THE AUTHOR

...view details