திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன் பேசியபோது, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசினார்.
இதைத் தொடர்ந்து பாஜகவினர், இந்து முன்னணியினர் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் நெல்லை கண்ணன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
செருப்பு அனுப்பி நூதன போராட்டம் மேலும் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஈரோடு மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை கண்ணன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் இருந்து அவருக்கு செருப்பு மாலைகள் பார்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
இதையும் படிக்க: காமராஜர் சிலைக்கு அவமரியாதை: குறிப்பிட்ட பிரிவினர் சாலை மறியல்