ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழ்நாடு - கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரமும் பேருந்து மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் சாரல் மழை பெய்ததினால், காலை முதலே திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் மலைப்பகுதியில் பயணிக்கும் வாகனங்கள் மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக ஊர்ந்து செல்வதோடு, மலைப்பாதையை கடப்பதற்கு வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.