ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே மணியங்காட்டூரை சேர்ந்தவர் செல்வராஜ் (52). கவுந்தப்பாடி அரசு போக்குவரத்து கழக ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் வழக்கம்போல் இன்று (ஜூலை11) கவுந்தப்பாடியில் இருந்து பெருந்துறை நோக்கி பேருந்தை இயக்கினார்.
வெள்ளாங்கோவில் வழியாக செல்லும்போது, அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் புறப்பட்டார். சிறிதுதூரம் சென்றவுடன் ஓட்டுநர் செல்வராஜூக்கு மயக்கம் ஏற்பட்டதால், சமயோசிதமாக யோசித்து பேருந்தை மெதுவாக சாலையோரம் நிறுத்தினார்.