ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தலமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் 32 சில்வர் ஓக் மரங்கள் மற்றும் இரண்டு தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டன. வங்கியின் வளாகத்தில் இருந்த சில்வர்ஓக் மரங்கள் கடந்த பிப்.1ஆம் தேதி வெட்டி கடத்தப்பட்டது. அரசு கட்டிட வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட வேண்டுமெனில் தலமலை மரத்தடுப்பு பாதுகாப்பு கமிட்டியிடம் முறையான அனுமதி பெற்று வெட்ட வேண்டும். ஆனால் வளாகத்தில் இருந்த 32 சில்வர் ஓக் மற்றும் தென்னை மரங்கள் முறையான வனத்துறை, வருவாய்த்துறையிடம் அனுமதி பெறவில்லை என அப்பகுதி மக்கள் குற்றசாட்டு தெரிவித்தனர்.
அதிமுக கூட்டுறவு வங்கித் தலைவர் மீது திருட்டு வழக்கு - திருட்டு வழக்கு
ஈரோடு: அனுமதியின்றி 32 சில்வர் ஓக் மரங்களை வெட்டியதாக தலமலை கோடிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் மீது திருட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையடுத்து தாளவாடி வட்டாட்சியர் ஜெகதீசன், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அனுமதியின்றி மரம் வெட்டி விற்பனை செய்ததை வருவாய்த் துறையினர் கண்டுபிடித்தனர். இச்சங்கத்தில் தலைவராக உள்ள அதிமுகைச் சேர்ந்த பிரசன்னாகுமார் தனிச்சையாக மரங்களை வெட்டி கடத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து தலமலை கிராம நிர்வாக அலுவலர் சத்திவேல் ஆசனூர் காவல் நிலையத்தில் தொடக்க வேளாண்மை தலைவர் பிரசன்னகுமார் மீது மரத் திருட்டு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து ஆசனூர் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.