ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைக்கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கர்நாடக எல்லையில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் வறட்சியின் காரணமாக விவசாய நிலங்களில் வெப்பக்காற்று வீசி வந்தது. இந்நிலையில் இன்று தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தாளவாடியில் ஆலங்கட்டி மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி - ஆலங்கட்டி மழை
ஈரோடு: தாளவாடியில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தாளவாடியில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை
மேலும் தொட்டகாஜனூர், பாரதிபுரம், இக்கலூர், இரியாபுரம், குமிட்டாபுரம் ஆகிய இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.