ஈரோடு மாநகராட்சி 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் காவிரியாற்றின் கரையில் கொட்டபட்டுவந்தது. இதனால் காவிரி ஆறு மாசடைவதாகப் பலமுறை குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து சீர்மிகு நகரம் திட்டத்தில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் குப்பைகளைத் தரம்பிரித்து அரைத்து உரமாக்கப்பட்டன.
இப்பணிகளை இன்று தமிழ்நாடு பசுமை தீர்ப்பாய தென்மண்டல கண்காணிப்பு அலுவலர் ஜோதிமணி நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு காவிரிக்கரையில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாகவும், இதனை பாரதியார் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் பார்வையிட்டு ஆராய்ச்சி செய்ய உள்ளதாகவும், இதனால் தற்போது காவிரியின் பரப்புளவு அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்தார்.