ஈரோடு: கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக ஓட்டுநராக பணிபுரிபவர் துளசி சாமிநாதன். கடந்த ஓர் ஆண்டாக, கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வாகன ஓட்டுநர் பணியிடம் காலியாக உள்ளதை அறிந்த சாமிநாதன், அப்பணிக்காக விண்ணப்பித்து உள்ளார்.
தற்போது கொடுமுடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக லட்சுமி உள்ளார். அவரது கணவர் ராஜேந்திரன் மின்சாரத் துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
சாமிநாதனின் பணி நிரந்தரம் செய்யப்பட இருப்பதை அறிந்த ராஜேந்திரன், அவரை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை தரக்குறைவாகப் பேசிய ராஜேந்திரனை கண்டித்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அலுவலகம் முன்பு சாமிநாதன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.