ஈரோடு: கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் நவீன். இவர் கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் பணி செய்து வந்தார். தனது இருசக்கர வாகனத்தில் கோபியிலிருத்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் கள்ளிப்பட்டி அருகே அவர் சென்றார். அப்போது அவருக்கு முன்னால் சென்ற அரசு பேருந்தினை முந்திச்செல்ல அவர் முயன்றதாக தெரிகிறது.
அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலை விரிவாக்கப் பணிகள் முடிவு பெறாத நிலையில் உள்ளது. ஜல்லி மற்றும் சிறு கற்களில் இருசக்கர சக்கரம் சிக்கியதால் நவீன் நிலை தடுமாறி நேற்று (ஜன.5) தவறி சாலையில் விழுந்தார்.