ஈரோடு:தமிழ்நாட்டில் நாளை (மே.10) முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது. பொது முடக்கத்தின் போது பேருந்து, வாடகை கார், ஆம்னி பேருந்துகள், ஆட்டோ போன்ற போக்குவரத்துகள் ரத்து செய்யப்படுகிறது. இதனால் சத்தியமங்கலத்தில் வெளியூர் செல்லும் பயணிகள் இன்று (மே.09) காலை முதலே திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற இடங்களுக்கு பேருந்தில் பயணித்தனர்.
இந்நிலையில் மாலை 6 மணிக்கு திடீரென அரசு மற்றும் தனியார் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால் திருப்பூர், கோவை செல்லும் பயணிகள் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள், பேருந்து வசதி செய்து தரக்கோரி போக்குவரத்து கழக அலுவலர்களிடம் முறையிட்டனர்.