ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொளப்பலூரைச் சேர்ந்தவர் நாகம்மாள் (60). இவரது வீட்டுக்கு நேற்று (ஆக.21) இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், பழைய நகைக்கு பாலிஷ் செய்து தருவதாகக் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய மூதாட்டி நாகம்மாள், அவர்களிடம் மூன்று பவுன் தங்க நகையை கழட்டிக் கொடுத்துள்ளார். அப்போது, நகையை சுத்தம் செய்ய சுடுதண்ணீரில் கழுவ வேண்டும் என்றும், அதற்கு ஒரு பாத்திரம் தருமாறும் அந்நபர்கள் கூறியுள்ளனர்.
மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு இதையடுத்து சுடுநீர் கொண்டு வருதற்கு வீட்டுக்குள் சென்ற மூதாட்டி, திரும்பி வந்து பார்த்தபோது நகையுடன் அவர்கள் தப்பியோடியது தெரியவந்தது. உடனடியாக பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் அப்பகுதி முழுவதும் திருடர்களைத் தேடியுள்ளார்.
ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில், சிறுவலூர் காவல் துறையினரிடம் மூதாட்டி புகாரளித்தார். இப்புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நகையுடன் பைக்கில் தப்பியோடிய திருடர்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:குழந்தை இல்லாத மருமகளிடம் அத்துமீறிய மாமனார்... உணவில் எலி பேஸ்ட் வைத்துக் கொன்ற மருமகள்