பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் மாற்றம் வர வாய்ப்பிருப்பினும் அனைத்து கணிப்புகளும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் என தெரிவித்திருப்பது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த கணிப்புகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் திமுக பெருமைபட ஒன்றும் இல்லை. மாறாக அதிமுகவின் வாக்குகளை பிரித்து வெற்றி பெற போராடியதற்காக அமமுக வேண்டுமானால் பெருமை கொள்ளலாம்.
இரண்டு இடங்களில் பாஜக வெற்றி பெற்றாலும் அது முழு வெற்றியே - இல.கணேசன் - இல.கணேசன்
ஈரோடு: தமிழ்நாட்டில் பாஜக இரண்டு இடங்களில் வெற்றி பெற்றாலும் அதனை தான் முழு வெற்றியாக பார்ப்பதாக இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இல.கணேசன்
தமிழ்நாட்டில் 50 விழுக்காடு வெற்றி வாய்ப்பு பாரதிய ஜனதா கூட்டணிக்கு இருக்கிறது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்கள் கிடைப்பதுகூட சந்தேகம். காங்கிரஸ் தற்போது பெருங்காய டப்பாவாக மாறிவிட்டது" என்றார்.