தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை முதல் முழு ஊரடங்கு - ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் - ஈரோடு ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்

ஈரோடு: நாளை (மே.10) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சொந்த ஊர் திரும்புவதற்காக வடமாநில தொழிலாளர்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் குவிந்தனர்.

ஈரோடு செய்திகள்
நாளை முதல் முழு ஊரடங்கு - ஈரோடு ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்

By

Published : May 9, 2021, 5:10 PM IST

கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதையும் உலுக்கி வருகிறது. தமிழ்நாட்டிலும் கரோனாவின் தாக்கம் அதிகரிப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. எனினும், தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், அண்டை மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதை போல தமிழ்நாட்டிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நாளை 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாளை முதல் முழு ஊரடங்கு - ஈரோடு ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்களில் வடமாநிலத்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். நாளை (மே 10) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இன்று (மே.9) ஈரோடு ரயில் நிலையத்தில் குவிந்தனர்.

அவர்களை ரயில் நிலைய ஊழியர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பின்னர் ரயில் நிலைய நடைமேடைகளுக்கு செல்ல அனுமதித்தனர். மேலும் இன்று (மே.9) ஒரு நாள் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் பாட்னா, ஒரிசா போன்ற மாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக ஈரோட்டுக்கு வருகை தந்த வடமாநில தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பலர் ஈரோடு ரயில் நிலையத்தில் குவிந்தனர்.

மேலும் ஈரோடு ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில்கள் ஏதும் நாளை (மே.10) முதல் இயக்கப்படாது என்றும், இன்று (மே.9) ஒரு நாள் மட்டுமே ரயிலில் பயணிக்க முடியும் என்றும் ரயில் நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:'எல்லோருக்கும் எல்லாம் என்பதே லட்சியம்' முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details