ஈரோடு மாவட்டம் காளைமாட்டு சிலை பகுதியில் சூரம்பட்டி காவல் துறையினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த, சிறுவர்கள் இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் வந்த இருசக்கர வாகனம், வெள்ளோடு காவல் நிலை எல்லை பகுதியில் திருடியது தெரியவந்தது. மேலும், அவர்கள் ஈரோட்டில் பல இடங்களில், செல்போன் திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஆகாஷ் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்த இருசக்கர வாகனம், செல்போன், வாட்ச் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.