ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் புலிகள் காப்பம், பவானிசாகர் வனப்பகுதியில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. வனத்தில் வேட்டை விலங்குகள் சாப்பிட்ட இறைச்சிகளின் எச்சம், கழிவுகளை கழுகுகள் தின்று வனத்தை சுத்தம் செய்கின்றன.
வனத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவதால், அதனைவிலங்குகள் சாப்பிட்டு உயிரிழக்கின்றன. இறந்த விலங்குகளின் மாமிச இறைச்சிகளை சாப்பிடும் கழுகுகளும் உயிரிழக்கின்றன.
இதையடுத்து, வனத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாறுக் கழுகுகளால் வனத்தில் பயன்பாடுகள் குறித்து அருளகம் தொண்டு நிறுவனம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன் தலைமையில் சத்தியமங்கலம்சுற்று வட்டாரப்பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில்இசை நிகழ்ச்சியுடன் பிரசாரக் கலைஞர்கள் பாட்டு பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேருந்து பயணிகளிடம் விழிப்புணர்வு பிரசார துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.