ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய ஐந்து நாள்களுக்குப் பிறகு, நேற்று (மார்ச்.17) அதிமுக வேட்பாளர் ஏ.பண்ணாரி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, மனு தாக்கல் செய்ய எஸ்ஆர்டி கார்னரில் இருந்து ஊர்வலமாக வந்த அதிமுகவினர் 200 மீட்டர் தூரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல் வேட்புமனு தாக்கல் - வேட்புமனு தாக்கல்
ஈரோடு : பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.பண்ணாரி முதல் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல் வேட்புமனு தாக்கல்!
வேட்பாளருடன் இருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய உடன் செல்ல அனுமதிக்கப்பட்டனர். வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு வேட்பாளர் பண்ணாரி உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். அப்பகுதியில், இன்று (மார்ச். 18) திமுக கூட்டணியான சிபிஐ வேட்பாளர் பி.எல்.சுந்தரம் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இதையும் படிங்க :வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே ரயில் நிலையம் அமைக்க பரிசீலிக்கலாம் - நீதிமன்றம்