ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாயக்கன்காடு பகுதியில் தனியார் சொகுசு விடுதி இயங்கிவருகிறது. இந்த விடுதியில் உள்ள அறை ஐந்தில் எதிர்பாராத விதமாக குளர்சாதனப் பெட்டியில் இருந்து புகை வந்துகொண்டிருந்தத நிலையில், திடீரென குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிறதியது.
மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்! - 5 lakh things destroyed in fire
ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கு இறையாகியுள்ளது.
இதனால் ஏற்பட்ட தீவிபத்தில் அறையில் இருந்த பொருட்கள் பற்றி எரிய தொடங்கியுள்ளது. அதன் பின்னர் கோபிசெட்டிபாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விடுதியினுள் நுழைய முற்பட்டனர்.
ஆனால், தீ மளமளவென பரவியதால், ஜன்னல்களை உடைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர் முயற்சியால் சுமார் ஒரு மணிநேரம் போராடிய தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை முற்றியும் அணைத்தனர். இதனால் விடுதியில் கட்டில் மெத்தை மரப்பொருட்கள் என ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.