தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடை உத்தரவை மீறியவர்களுக்கு தோப்புக்கரணம் தண்டனை! - Corona Advice for Young People

ஈரோடு: ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று குறித்து வகுப்பெடுத்ததுடன் 100 தோப்புக்கரணம் போட வைத்து விழிப்புணர்வு தண்டனையை மாவட்ட காவல்துறையினர் வழங்கினர்.

தோப்பு கரணம் தண்டனை
தோப்பு கரணம் தண்டனை

By

Published : Mar 28, 2020, 4:15 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளை தவிர்த்து வெளியே வரவேண்டாம் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், இரு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், அவர்களுக்குக் கரோனா பற்றிய அறிவுரைகளைக் கூறிவருகின்றனர்.

தடையை மீறியவர்களுக்குத் தோப்புக்கரணம் தண்டனை!

இந்நிலையில், ஈரோட்டை அடுத்த அவல்பூந்துறை நான்கு சாலைப்பகுதியில் இளைஞர்கள் பலர் 144 தடை உத்தரவை மீறி, எந்தவித அத்தியாவசியத் தேவைகளும் இன்றி, இருசக்கர வாகனத்தில் வந்தனர். இதனை அறிந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதுடன், கரோனா பற்றிய அறிவுரைகளைக்கூறி, அவர்களை தோப்புக்கரணம் போடவும் வைத்தனர்.

தொடர்ந்து இளைஞரிடம் பேசிய காவல்துறை அலுவலர்கள், படித்த இளைஞர்கள்தான் கரோனா வைரஸ் தொற்றுப் பற்றிய தகவல்களை பெரியவர்களிடம் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க:‘வீட்டை விட்டு வெளியே வராதீங்க!’ - தூய்மை பணியாளர்களின் பணிவான வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details