ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கீழ்வானி, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பவளக்கொடி (47). இவர் காட்டூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்து பணியினை முடித்துவிட்டு மதியம் சுமார் 1.30 மணி அளவில் காட்டூரில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக அந்தியூரில் இருந்து ஈரோடு செல்லும் 25A என்ற அரசு பேருந்தில் ஏறி உள்ளார்.
பேருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் பாட்டப்பன்கோவில் அருகே பவளக்கொடிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த பேருந்து ஓட்டுனர் சண்முகசுந்தரம், நடத்துனர் ராஜ்குமார் உடனடியாக பேருந்தை நிறுத்தி 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர்.