தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்துறையினர் பொய் வழக்கு பதிவதாக விவசாயிகள் புகார்! - காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதாக விவசாயிகள் புகார்!

ஈரோடு: நீராபானம் இறக்கும் எங்களை கள் இறக்குவதாக போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து அச்சுறுத்துவதாகக் கூறி விவசாய சங்கத்தினர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஈரோடு

By

Published : Aug 21, 2019, 1:11 AM IST

தென்னை மரத்தில் இருந்து நீராபானம் எடுத்தால் கள் இறக்குவதாகக் கூறி காவல்துறையினர் வழக்குப் போடுவதாகக் கூறி விவசாயிகள் சங்கத் தலைவர் பாபு தலைமையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், தென்னை மரத்தில் இருந்து நீராபானம் தயாரிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. நீராபானம் என்பதும் கள் என்பதும் ஒரே மரத்தில் ஒரே பாளையில் ஒரே தன்மையில் தான் எடுக்கப்படுகிறது. ஆகவே கள்ளாக மாறாமல் இருக்க வேளாண்துறை அலுவலர்கள் எங்களுக்கு எந்தவித பயிற்சியும் செயல்முறையும் கொடுக்கவில்லை. நாங்கள் நீராபானம் இறக்குவது கள்ளாக மாறுவதற்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது. அரசை எதிர்த்தோ காவல்துறையை எதிர்த்தோ நாங்கள் செய்யவில்லை. இது எங்களது வாழ்வாதார பிரச்னை. ஆகவே தமிழக விவசாயிகள் அனைவருக்கும் நீராபானம் மற்றும் கள் இறக்க அனுமதி வேண்டும்’ என்று தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதாக விவசாயிகள் புகார்!

அதுமட்டுமல்லாமல், விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவதும் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை விவசாயிகள் மீது நடக்காமல் இருக்க காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு விவசாயிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்றி தருமாறும் கேட்டுக் கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details