ஈரோடு: யானைகள் ஊருக்குள் புகுவதை தடுப்பதற்காக அமைக்க உள்ள புதிய மின் வேலிக்கு அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், அரசாணையை திரும்ப பெற கோரி விவசாயிகள் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் புகார் அளித்துள்ளனர்.
வனவிலங்குகள் மற்றும் யானைகள் உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள விளைநிலங்களுக்கு வருவதும், மின்வேலிகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இது போன்ற துயர சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, தமிழ்நாடு மின்வேலிகள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) பல்வேறு விதிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள், தங்களது தோட்டத்தில் அமைக்கும் மின்வேலிக்கு, அரசு புதியதாக விதித்துள்ள விதிமுறைகளை திரும்ப பெற வேண்டும் என தாளவாடியில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க:தண்ணீரின்றி தவிக்கும் கிராம மக்கள்.. காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்!
ஈரோடு, சத்தியமங்கலம், தாளவாடி மலைப்பகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நேற்று (செப்.10) நடைபெற்றது. இம்முகாமில், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் திவ்யபிரியதர்ஷினி தலைமை தாங்கினார். மேலும், நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா முகாமில் கலந்து கொண்டு, பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விபரங்கள் கேட்டு உடனடியாக தீர்வு காணுமாறு அறிவுறுத்தினார்.
இந்நிலையில், தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகள், வனத்துறை புதியதாக பிறப்பித்துள்ள மின் வேலிகள் தொடர்பான புதிய அரசாணையில் உள்ள விதிமுறைகள் விவசாயிகளுக்கு ஏற்றவாறு இல்லை எனவும், இந்த விதிமுறைகளை பின்பற்ற முற்றிலும் இயலாத நிலை உள்ளதால், மின்வேலி தொடர்பான புதிய அரசாணையை அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை மனுவை எம்.பி ஆ.ராசாவிடம் அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து, மனுவை பெற்றுக் கொண்ட எம்.பி ஆ.ராசா, மனுவின் தொடர்பாக உடனடியாக சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் பேசி அரசாணையை திரும்ப பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், தலமலை தொட்டபுரம் பகுதியில் விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகள் குடிபோதையில் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். அதனைத் தொடர்ந்து, தாளவாடி அரசு மருத்துவமனையில் 6 மாதத்தில் உடற்கூராய்வு பரிசோதனை துவங்கியுள்ளதாக மருத்துவர் அலுவலர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:“என் வாழ்க்கை கோலத்தை தொடங்கி வைத்தவர் இவர்தான்” - விஜய் சேதுபதி குறிப்பிட்ட பிரபலம் யார்?