ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை அடுத்த மூலக்கரையை சேர்ந்தவர் பூபதி. இவரது விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
உயர்மின் கோபுரம் அமைக்க பாறைகளுக்கு வெடி வைப்பு - விவசாயிகள் குற்றச்சாட்டு
ஈரோடு: விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க பாறைகளுக்கு வெடி வைப்பதால், அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு ஆபத்து ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
High power tower
இந்நிலையில் அஸ்திவாரம் தோண்டும் பணியின் போது பாறைகளுக்கு வெடி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புகள் சேதமடைகின்றனர்.
இதனையடுத்து அங்குள்ள விவசாயிகள் விளைநிலத்தின் வழியாக மின் கோபுரம் அமைப்பதற்கு தடைக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அனுமதியின்றி மின்வாரிய அலுவலர்கள் காவல்துறையின் உதவியுடன் தொடர்ந்து பணி செய்து வருவதாகவும், இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.