ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். 19 வயதான இவர் விவசாயம் செய்து வருகிறார். தனது நண்பர் நாச்சிமுத்துவுடன் சாலட்டி கிராமத்தில் விவசாய வேலை முடித்துவிட்டு சக்திவேல் டிராக்டரில் வீடு திரும்பியுள்ளார். டிராக்டரை நாச்சிமுத்து ஓட்டினார். இருட்டிபாளையம் அருகே வந்தபோது, சாலையோரத்தில் காட்டுயானை ஒன்று நின்றுள்ளது.
யானையால் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு! - விபத்து
ஈரோடு: சாலையோரத்தில் நிற்று கொண்டிருந்த யானையை பார்த்து ஓட்டுநர் மிரண்டதில், கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்தார்.
யானையை பார்த்தவுடன் பயத்தில் நாச்சிமுத்து மிரண்டுள்ளார். இதனால் டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சக்திவேல் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த நாச்சிமுத்து உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன்பின்னர், சாலையோரம் முகாமிட்ட யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர். வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.