தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகை குஷ்பு சேரி வார்த்தை விவகாரம்: "எனக்கொன்னும் தப்பா தெரியலை" - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு! - congress

EVKS Elangovan: குஷ்புவிற்கு எதிராக காங்கிரசார் போராடி வரும் நிலையில் குஷ்பு பேசியதில் தவறு இருப்பதாக தெரியவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

EVKS Elangovan has said the alliance led by Stalin will win the parliamentary elections in Tamil Nadu
ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 2:27 PM IST

Updated : Dec 1, 2023, 3:14 PM IST

EVKS Elangovan has said the alliance led by Stalin will win the parliamentary elections in Tamil Nadu

ஈரோடு: வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற தனியார் உணவக திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு உணவகத்தினை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில், "நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் 3லிருந்து 4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் எனவும், நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் சூழ்நிலை நிலவி வருவதாகவும் கூறினார்.

சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போது தான் அதிக மழை பெய்து வருவதாகவும், ஒருசில இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருவதோடு, நிவாரண பணிகள் துரிதப்படுத்தியுள்ளதாகவும் கூறினார். நடிகை குஷ்புவின் சேரி வார்த்தை விவகாரம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகை குஷ்பு பேச்சில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை என்றாலும் அந்த பேச்சு குறித்து முழுவிபரங்கள் தெரியவில்லை எனக் கூறினார்.

தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக 3வது பேரியிக்கமாக காங்கிரஸ் கட்சி உள்ளதால், மக்கள் காங்கிரஸ் கட்சி மீது பற்றும் ஆதரவும் தந்து கொண்டிருப்பதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பெங்களூரில் பரபரப்பு!

Last Updated : Dec 1, 2023, 3:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details