ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையிலான ஆய்வுப் பணிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொதுக்கணக்கு குழுத் தலைவர் செல்வபெருந்தகை, "ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் தரம் குறித்தும், காலதாமதம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் கலவை தரம் சந்தேகமாக இருப்பதால், சிமெண்ட் கலவைத் தரம் குறித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட ஆட்சியருக்கு விருதுகள் வழங்க, அரசுக்கு பொதுக்கணக்கு குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், “தமிழகத்தில் உள்ள ஆளுநருக்கு, அடிப்படையில் சில பிரச்னைகள் உள்ளது, அவருக்கு மனநிலை சரியில்லை என்று நினைக்கிறேன். ஆளுநர் நடவடிக்கையில் கடந்த நான்கு நாட்களில் பல மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதலில் அவர் மனிதராக மாற வேண்டும் என விரும்புகிறேன்.