கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சிமன்ற குழுக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளா் ஈஸ்வரன் செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது அவர், "இந்த தோ்தலில் கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மக்கள் தெளிவான முடிவை எடுத்துள்ளனர். ஆளும் கட்சி தமிழ்நாட்டில் வெற்றி பெறாதது மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் கொண்டுள்ள கோபத்தைக் காட்டுகிறது.
‘கொங்கு மண்டலத்தில் அதிமுக செல்வாக்கை இழந்துள்ளது’ - ஈஸ்வரன் - ஈஸ்வரன்
ஈரோடு: மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுக ஒரு தொகுதியை கூட கைபற்றாதது அப்பகுதியில் அதிமுக தனது செல்வாக்கை இழந்திருப்பதை காட்டுவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளா் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் அநாகரிகமான முறையில் பேசுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தேர்தல் மூலம் மக்கள் பாடம் புகட்டுவார்கள். 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக மக்களவை உறுப்பினர்களுடன் இம்முறை வெற்றி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஒப்பிடக் கூடாது.
இம்முறை திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற அனைவரும் திறமையுள்ளவர்கள். கொங்கு பகுதியில் அதிமுக தன் பலத்தை இழந்து வருவது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. திமுக கூட்டணியோடு உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம்" என்றார்.