தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குறைந்த மின்னழுத்தம்: மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முற்றுகை! - Erode Vettukattuvalasu demand proper connection

ஈரோடு: வெட்டுக்காட்டுவலசு பகுதியில் சீரான மின் வசதி வழங்க வலியுறுத்தி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

erode eb office siege, ஈரோடு மின்வாரியம் முற்றுக்கை
erode eb office siege

By

Published : Dec 9, 2019, 5:02 PM IST


ஈரோடு மாநகராட்சியின் 19ஆவது வார்டில் குறைந்தழுத்தம் மின் விநியோகத்தால் மின்சாதனப் பொருள்கள் பழுதடைந்துள்ளதாகக் கூறி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாநகராட்சி 19ஆவது வார்டுக்குள்பட்ட வெட்டுகாட்டுவலசு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். கடந்த ஒரு மாதமாக இந்தப் பகுதியில் சீரான மின் விநியோகம் செய்யப்படவில்லை என்பது பொதுமக்களின் புகாராகும்.

மேலும், குறைந்தழுத்த மின் ( Low Voltage Power) விநியோகத்தால் வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சி பெட்டி, மின் மோட்டார் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் பழுதடைந்து பொருள்செலவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ‘எக்குத்தப்பாக நடந்துகொண்டால் கதை கந்தலாகிடும்’ - வடகொரிய அதிபருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

இது தொடர்பாக மின்வாரிய அலுவலர்களிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியடைந்த 50-க்கும் மேற்பட்டோர் நாராயணவலசில் உள்ள மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வீரப்பன்சத்திரம் காவல் துறையினர், முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details