ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், அனைத்து காவல் நிலையங்கள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு பேனர்களை வைக்குமாறு உத்தரவிட்டார்.
கந்து வட்டியை ஒழிக்க காவல்துறை புதிய முயற்சி! - கந்துவட்டி மிரட்டல்
ஈரோடு: கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் தைரியமாக புகார் அளிக்க வலியுறுத்தி, காவல்துறை சார்பாக பொதுமக்கள் பார்வைக்கு விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, சத்தியமங்கலம் காவல் நிலையம் சார்பில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பேனர் பவானி ஆற்றுப்பாலம் அருகே வைக்கப்பட்டுள்ளது.
சாலையில் செல்வோர் இந்த விழிப்புணர்வு பேனரை படித்தபடி செல்கின்றனர். இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் கூறுகையில், அதிக வட்டியால் பாதிக்கப்பட்டோர், நில அபகரிப்பு மற்றும் கந்துவட்டி கும்பலால் மிரட்டல் போன்ற புகார் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.