ஈரோடு : சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்குய்யனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சாமிக்கண்ணு. இவருக்கு மகன் ஜீவானந்தம் (20), மகள் பவித்ரா (15) என இரண்டு குழந்தைகள். ஜீவானந்தம் கோவையிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில், கடந்த பிப். 7ஆம் தேதி காலை தனது நண்பர் பன்னீர்செல்வம் என்பவருடன் பைக்கில் சென்றுள்ளார்.
அப்போது, பவானிசாகர் அருகே வெள்ளியம்பாளையம் என்ற இடத்தில் ஜீவானந்தம் சென்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதி விபத்தில் சிக்கினார். இதில், சம்பவ இடத்திலேயே ஜீவானந்தம் உயிரிழந்தார்.
இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். பின்னர், ஜீவானந்தத்திற்கு இறப்பு சடங்குகள் நடந்தன. இந்நிலையில் மறைந்த ஜீவானந்தத்தின் தங்கை பவித்ரா, சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், அண்ணன் இறந்த சோகத்தில் மனமுடைந்து காணப்பட்டார்.