ஈரோடு: நாட்டில் 90 சதவீத வேலை வாய்ப்புகளுக்கு தொழில் திறன் தேவைப்படுகிறது. தொழில்நுட்ப மேம்படுத்தல் உலகளவில் வளரும் சூழலில், தரமான திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் தனியார் பள்ளியில் தொழிற்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் - Erode district news
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதில் பள்ளி மாணவர்களுக்கு 3டி கேம், ஏஆர் அல்லது விஆர், கிராபிக் டிசைனிங், எலக்ட்ரானிக்ஸ், மொபைல் ரோபாட்டிக்ஸ், 3டி பிரிண்டிங் மற்றும் கேட் மாடலிங், வெப் மற்றும் மொபைல் ஆப் டிசைனிங், மெகாட்ரானிக்ஸ், புரோகிராமிங் மொழி, ட்ரோன் ஆப்பரேட்டிங், ஐஓடி போன்ற பல்வேறு திறன்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தனியார் டெக்னாலஜி நிறுவனத்தின் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதையும் படிங்க:கண்டபேருண்டாசனத்தில் உலக சாதனைகளை படைத்த பள்ளி மாணவன்!