ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு செல்லும் விரைவு ரயில்களில் சமீப காலமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக சேலம் - ஈரோடு இடையிலான வழித்தடத்தில் அதிகளவு கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாக பயணிகள் புகார் அளித்த வண்ணம் இருந்தனர். புகார்களின் அடிப்படையில் ரயில்வே காவல்துறையினர் சிறப்பு படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.
ரயில் கொள்ளையர்களிடம் தங்க நகைகள் பறிமுதல் - தங்க நகைகள்
ஈரோடு: ரயில் பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து மீட்டு ரயில்வே காவல்துறையினர் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் ரயில் நிலையங்களில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த வடமாநில கும்பல் ஒன்றை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் அனைவரும் ரயிலில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பிலான 54 சவரன் தங்க நகை, 49 செல்போன்கள், இரண்டு லேப்டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து இன்று கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் வழங்கும் நிகழ்வு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ரயில்வே துணை காவல் தலைவர் கே. பாலகிருஷ்ணன் கொள்ளை வழக்கில் சிறப்பாக பணியாற்றிய சிறப்பு காவல் படையினரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.