ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். நீர் இருப்பு 32.8 டிஎம்சி ஆக உள்ளது. இந்நிலையில், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியாக இருந்தது. தற்போது அணையின் நீர்வரத்து 6 ஆயிரத்து 971 கன அடியாக அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி - Erode district News
ஈரோடு : பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (செப்.13) காலை நிலவரப்படி 99.76 அடியாகவும், நீர்வரத்து 6 ஆயிரத்து 971 கனஅடியாகவும் உள்ளது.
Erode pavani sager dam Latest Update
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (செப்.13) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 99.76 அடியாகவும், நீர்வரத்து 6 ஆயிரத்து 971 கனஅடியாகவும் உள்ளது.
மேலும், அணையில் இருந்து 2 ஆயிரத்து 750 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 28.61 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.