தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

' உன்னை கொன்றுவிடுவேன்' - ஈரோடு காய்கறி சந்தை சங்க உறுப்பினருக்கு கொலை மிரட்டல்! - MARKET

ஈரோடு: நேதாஜி காய்கறி சந்தை கணக்கு விவரத்தை கேட்ட சங்க உறுப்பினரை சங்கத் தலைவரின் மகன்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் சங்க உறுப்பினரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த சங்க தலைவர் மீது புகார்

By

Published : May 9, 2019, 8:19 AM IST

ஈரோடு நேதாஜி தினசரி சந்தையில் சுமார் 800-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கிவருகின்றன. இங்கு ஆண்டுதோறும் கடைகளுக்கு ரூ. 1000 சந்தா என நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று சங்கத் தலைவர் பி.பி.கே. பழனிச்சாமி தலைமையில் கணக்கு வரவு செலவு கூட்டம் நடைபெற்றது.

அப்போது சங்கத்தின் உறுப்பினரான பி. ஆர்‌. தர்மபுரியான் என்பவர் 15 ஆண்டு வரவு செலவு கணக்கை காட்டுமாறு கேட்டுள்ளார். இதில், விவாதம் ஏற்பட சங்கத் தலைவரின் மகன்கள் திடீரென தர்மபுரியானை அடித்து உதைத்து சட்டையை கிழித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினரான பி.ஆர். தர்மபுரியான் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்று தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளார்.

ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் சங்க உறுப்பினரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த சங்க தலைவர் மீது புகார்

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தர்மபுரியான், நேதாஜி தினசரி சந்தையில் கடந்த 15 ஆண்டுகளாக 20 கோடி வரை சந்தா தொகையை தலைவர், ஐந்து நிர்வாகிகள் மோசடி செய்துவிட்டதாகத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details