தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரண்டுகட்டமாக நடைபெற்று, நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஈரோடு ஒன்றியத்திற்கான வாக்குகள் சித்தோடு தனியார் கல்லூரியில் எண்ணப்பட்டது. மொத்தமுள்ள 6 வார்டுகளில் 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் நீலாவதி வெற்றி பெற்றார்.
ஈரோடு ஊராட்சி ஒன்றியம்: அதிமுக - திமுக சமநிலை - ஈரோடு உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
ஈரோடு: ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள ஆறு வார்டுகளில் அதிமுக, திமுக தலா மூன்று வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
2ஆவது வார்டில் பிரகாஷ் (திமுக), 3ஆவது வார்டில் பத்மாவதி (அதிமுக), 4ஆவது வார்டில் வெள்ளைச்சாமி (அதிமுக), 5ஆவது வார்டில் திருமூர்த்தி (திமுக), 6ஆவது வார்டு சௌந்தரவல்லி (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர். 6வது வார்டில் அதிமுக 144 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்துமாறு கேட்டுக்கொண்டனர். பின்னர் செல்லாத வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டு, மீண்டும் திமுக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிமுகவினர் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இதையும் படிங்க: பெண் வேட்பாளரைத் தாக்கிய காவல் துறையினர்: அதிர்ச்சி வீடியோ!