தமிழ்நாட்டில் மக்களவைத்தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்றத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியின் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து நடைபெற்றப் பொதுக்கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டார். கூட்டத்திற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தேர்தல் ஆணையத்துடன் கூட்டு வைத்து எதிர்க்கட்சிகளை வஞ்சிக்கிறது பாஜக - மனித நேய மக்கள் கட்சி
ஈரோடு: பாஜகவிற்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், வருமானவரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்துடன் கூட்டு வைத்து எதிர்க்கட்சிகளை வஞ்சித்து வருகிறது என மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா பேட்டியளித்துள்ளார்.
மோடி தனது ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பதில்லை. மாறாக காங்கிரஸ் கட்சி பற்றிய குற்றச்சாட்டுகளே அவரது பரப்புரையில் அதிகமாக இடம்பெறுகிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பரப்புரையில் இந்தியா வளர்ச்சி பெறுவதற்கான திட்டங்கள் அதிகமாக உள்ளது. பாஜகவிற்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவற்றுடன் கூட்டு வைத்து எதிர்கட்சிகளை வஞ்சித்து வருகிறது என விமர்சித்தார்.
மேலும், தமிழகத்தில் அதிமுக வேட்பாளர்கள், வாக்காளர்களை பண வெள்ளத்தில் நனைய வைத்து வருகிறார்கள். அதிமுக - பாஜக கூட்டணி தினந்தோறும் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும். திமுக கூட்டணியில் தற்போது போட்டியிட இடம் ஒதுக்கப்படவில்லை என்றாலும், நாட்டு நலனே முக்கியம் என்பதால் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம் எனத் தெரிவித்தார்.