கர்நாடக மாநிலம் மாண்டியாவிலிருந்து சர்க்கரை மூட்டைகளை ஏற்றிய லாரி ஈரோடு நோக்கி வந்துகொண்டிருந்தது. லாரியை ஓட்டுநர் ரவிக்குமார் என்பவர் இயக்கி வந்துள்ளார். அவருடன் உதவியாளர் முஜீப்பும் வந்துள்ளார். லாரி அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக வரட்டுப்பள்ளம் அணை அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் குறுக்கே தலைகுப்புற கவிழ்ந்தது. விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் ரவிக்குமாரும் உதவியாளர் முஜீப்பும் அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு லாரி! - போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு: அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக சர்க்கரை மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி சாலையின் குறுக்கே தலைகுப்புற கவிழ்ந்ததால் அப்பகுதியில், தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தலைகுப்புற கவிழ்ந்த லாரி
இந்த விபத்தால் ஈரோடு மாவட்டத்திலிருந்து பர்கூர் மலை வழியாக கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும், பர்கூர் மலைப் பாதையில் தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதால் கனரக வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.