ஈரோடு முத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பார்த்திபன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேற்று இரவு கோயிலுக்குச் சென்றுவிட்டு இன்று அதிகாலை வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
தலைமைக் காவலர் வீட்டில் 20 சவரன் கொள்ளை! - ஈரோடு காவல்துறையினர் விசாரணை
ஈரோடு: முத்தம்பாளையத்தில் உள்ள தலைமை காவலர் வீட்டில் 20 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளைடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
தலைமை காவலர் வீட்டிலே 20 சவரன் கொள்ளை
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, காவல் துறையினர் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.