ஈரோடு: அரசு தலைமை மருத்துவமனையில் 150க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இதையடுத்து கடந்த சில வருடங்களாக ஊதிய உயர்வு, வார விடுமுறை, பிஎஃப், இஎஸ்ஐ, உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை நிறுவனத்திடம் பலமுறை வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுவரை நிறுவனம் எவ்வித கோரிக்கைகளும் நிறைவேற்றாததால், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் தற்போது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
கோரிக்கைகள்: கடந்த 2022 ஆம் ஆண்டு தேசிய செயல்முறை ஆணைகள் மற்றும் 2023 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் பேரிலும், நாள் ஒன்றுக்கு பணியாளர்களுக்கு ரூ.724 ஊதியமாக வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் 2022-2023 ஆம் ஆண்டுக்கான போனஸாக குறைந்தபட்சம் ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும்.