ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வெண்டிபாளையம் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் குப்பைக் கிடங்கில் நேற்று (ஆகஸ்ட் 22) நள்ளிரவு முதல் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தீயை அணைக்கும் பணியில், மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையில் 3-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 50-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.