ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த நெய்தாளபுரத்தைச் சேர்ந்த மாகேதப்பா, அங்குள்ள வனப்பகுதியில் மேய்ச்லுக்காக தனது மாடுகளை ஓட்டிச் சென்றுள்ளார்.
ஈரோட்டில் மாடு மேய்க்க சென்றவரை தாக்கிய காட்டு யானை! - erode elephant attacks farmer
ஈரோடு: தாளவாடி அருகே மாடு மேய்க்க சென்ற விவசாயியை யானை தாக்கியதில், காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விவசாயி மாகேதப்பா
அப்போது, புதர்மறைவில் இருந்த யானையை பார்த்து மாடுகள் மிரட்சியுடன் ஓடியுள்ளன. மாடுகள் பயந்து ஓடுவதைப் பார்த்து அங்கு யானை இருப்பதை உறுதிசெய்து மாகேதப்பாவும் தப்பியோட முயற்சித்துள்ளார்.
இருப்பினும் அவரை யானை துரத்திச் சென்று தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட வனத்துறையினர், தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.